×

பலன் தரும் ஸ்லோகம் (உடல் வலிமை பெற தேவி நமஸ்கார துதி…)

யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதாநமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நமஹ                        பொதுப்பொருள்: எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப் படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப் படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப் படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இத்துதியை வசந்த பஞ்சமி நாளில் பாராயணம் செய்தால் உடல் வலிமை பெறும்….

The post பலன் தரும் ஸ்லோகம் (உடல் வலிமை பெற தேவி நமஸ்கார துதி…) appeared first on Dinakaran.

Tags : Namaskara ,Devi SARVAPUDESHU ,SAMSTITHANAMASTASYAY ,NAMASTASYA ,NAMASTASYA NAMO ,NAMAHA ,
× RELATED ‘‘கண்ணும் கமலம் கமலமே கைத்தலம்’’